திருமகள் சீரியலில் வில்லி மாற்றம்! புதிய வில்லி யார் தெரியுமா?

3 years ago 340

சன்டிவியில் நண்பகல் 12.30 மணிக்கும் இரவு 10.30 மணிக்கும் திருமகள் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. ஹரீஷ் ஆதித்யா இயக்கி வரும் இந்த தொடரில் சுரேந்தர் சண்முகம், ஹரிகா சாது, சாமிதா ஸ்ரீகுமார், ஜீவா ரவி, ரித்திகா வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். 

சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்தார். அஞ்சலி மற்றும் ராஜா குடும்பத்தினருக்கு இடையே நடைபெறும் குடும்ப பூசல்களை வைத்து திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கதைக்களமும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஆனால், திடீர் திருப்பமாக வில்லியாக நடித்து வந்த ஐஸ்வர்யா சீரியலில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தெய்வ மகள் சீரியலில் நடித்து பரவலாக வரவேற்பை பெற்ற ரேகா நடிக்க உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா அலை வேகமாக பரவியதைத் தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்காகலிமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திருமகள் சீரியல் படப்பிடிப்பும் தடைப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் தொடங்கியுள்ள படப்பிடிப்பில் வில்லியாக ரேகா களமிறங்கியுள்ளார். திருமகள் சீரியல் மட்டுமல்லாது பல்வேறு சீரியல்களில் இருந்தும் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நடிகர், நடிகைகள் விலகிய வண்ணம் உள்ளனர். 

சிலர் கொரோனா வைரஸ் அலை இன்னும் அச்சுறுத்திக் கொண்டிருப்பதால், பாதுகாப்பு காரணம் கருதி சீரியல் சூட்டிங்கில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர். தாய்மை அடைந்ததால் சிலர் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நடிகைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

அந்தவகையில், சன்டிவியில் பிரபலமாக இருக்கும் ரோஜா சீரியலில் இருந்தும் வில்லியாக நடித்த ஷாமிலி சுகுமார் விலகுவதாக அண்மையில் அறிவித்தார். 

வில்லி கதாப்பாத்திரமான அனு என்ற பெயரில் நடிப்பில் மிரட்டி வந்தார். தற்போது தாய்மை அடைந்திருப்பதால், ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...