தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் சரவணன் நடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து.
இதற்கு முன்னதாக இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் ஸ்ரேயாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
விரைவில் இவர்களுக்கு திருமணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. இதனை அவர்கள் அதிகாரப்பூர்வமாக தங்களது புதிய யூட்யூப் சேனலில் அறிவித்துள்ளனர்.
தங்களது திருமண நடைப்பெறும் கொண்டாட்டங்களை பார்க்க தங்களது யூடியூப் சேனலை பின்பற்றுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.