திருமணத்திற்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் பிரபல நடிகைக்கு கொரோனா!

3 years ago 396

நெஞ்சில் துணிவிருந்தால் படம் முலம் அறிமுகமானவர் மெஹ்ரின்.இதன்பின் தனுஷின் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் நடித்தார்.

மெஹ்ரினுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை மணக்கிறார். ஓரிரு மாதங்களில் திருமணத்தை நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தன.


இந்நிலையில் மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து மெஹ்ரின் கூறும்போது, ”கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பானது இல்லை. எனவே திருமணத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க யோசித்து வருகிறோம் ” என்றார்.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாராம் நடிகை மெஹ்ரின்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...