திருமணத்துக்கு ஓகே சொல்லாத நயன்தாரா- சோகத்தில் விக்னேஷ் சிவன்!

3 years ago 427

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஆசைப்பட்டும் நயன்தாரா இன்னும் ஓகே சொல்லாமல் இழுத்தடிப்பதால் பெற்றோர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளார்களாம்.

முதலில் சிம்பு, பின்னர் பிரபுதேவா என இரு காதலும் தோல்வியில் முடிந்த நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் நயன்தாரா.

திருமணமே செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். படங்கள் இல்லாத நிலையில், அடிக்கடி வெளியூர் செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நயன்தாராவின் தந்தை குரியனுக்கு உடல்நிலை சரியில்லாததால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்களாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட, குரியன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனாலும் நயன்தாரா திருமணத்துக்கு ஓகே சொல்லாமல் மவுனம் காத்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இதனால் விக்னேஸ் சிவனும் சோகத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...