திருமணத்துக்கு நடிகை டாப்சி நிபந்தனை

3 years ago 209

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி தற்போது அதிக இந்தி படங்களில் நடித்து வருகிறார். சினிமா அனுபவம் மற்றும் திருமணம் குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: 

“எல்லா துறைகளையும் போல் சினிமாவும் போட்டி நிறைந்த துறையாக உள்ளது. இதனால் கேமராவுக்கு முன்னால் நிற்கும் நடிகர், நடிகைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. 

ரசிகர்கள் தரும் ஆதரவுக்கு நாங்கள் கொடுக்கும் விலையாகவே போட்டி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகளை எடுத்துக்கொள்கிறோம்.

போட்டி நிறைந்த எல்லா துறைகளிலுமே சங்கடங்கள் உள்ளன. போட்டியும், மன அழுத்தமும் இல்லாத துறை எதுவும் இல்லை. 

எனது பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை காதலிப்பவர்களிடம் இந்த நிபந்தனையை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன். காதல் என்பது பொழுதுபோக்கு இல்லை.

எனது திருமணம் குறித்து பெற்றோர் கவலைப்படுகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படியும் வற்புறுத்துகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடுவேனோ என்ற வருத்தம் அவர்களுக்கு உள்ளது”. இவ்வாறு டாப்சி கூறினார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...