திருமணத்துக்கு பிறகு பெரிய கோஸ்டியுடன் களமிறங்கும் காஜல்

3 years ago 364

பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. 

நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் பேயாக நடித்து உள்ளனர். தற்போது காஜல் அகர்வாலும் புதிய படத்தில் பேயாக நடிக்கிறார். 

இந்த படத்துக்கு கோஷ்டி என்று பெயர் வைத்துள்ளனர். கல்யாண் இயக்குகிறார். இவர் பிரபுதேவா நடித்த குலேபகாவலி, ஜோதிகா நடித்த ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கியவர். 

காஜல் அகர்வாலுக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். 

இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, சத்யன் உள்பட 30 நடிகர் நடிகைகள் நடிக்கின்றனர். 

காஜல் அகர்வால் பேயாக மட்டுமன்றி போலீஸ் அதிகாரியாகவும் சினிமா நடிகையாகவும் வருகிறார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு பேய் தொந்தரவு கொடுப்பதால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பது கதை. பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...