பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரான செம்பருத்தி சீரியலின் மூலம் பெரியளவில் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷபானா.
இதனிடையே ஷபானா கடந்த சில ஆண்டுகளாக அவர் காதலித்து வந்த ஆரியன் என்பவரை கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டார். ஆரியன் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து பிரபலமானவர்.
மேலும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்த்தவர்கள், இதனால் இரு வீட்டாரும் சம்மதம் கிடைக்கவில்லை அதனால் நண்பர்களின் உதவியால் திருமணம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்களின் இரு வீட்டார்களும் எதிர்பார்ப்பு தெரிவித்து வருவதால் இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக வந்தந்திகள் பரவி வருகிறது.
மேலும் ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் எல்லோருமே சில வலிகளை அனுபவித்துதான் வந்திருப்போம் என்றும், பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் உள்ளது என்றும், சிலர் பிரியமான ஒருவரை இழந்திருக்கலாம் என்றும் பதிவு செய்ததை அடுத்து ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.