திருமணமானால் நடிப்பது தவறா? காஜல்ஆவேசம் !

3 years ago 445

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்தார்.

அவர் ஒரு பேட்டியில் பேசும் போது ,திருமணத்துக்கும், செய்கிற தொழிலுக்கும் சம்பந்தம் இல்லை. திருமணம் அவரவர் சொந்த வாழ்க்கை. சினிமாவில் நடிப்பது எனது தொழில். கடந்த வருடம் எனக்கு திருமணம் ஆனதில் இருந்து தொடர்ந்து நிறைய  படங்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று கூறினார்.

திருமணம் ஆன பிறகு எல்லா பெண்களும் அவரவர் வேலைக்கு சென்று கொண்டு இருக்கிறார்கள். ஆனால் திருமணம் ஆகிவிட்டது,வேலைக்கு ஏன் வந்தீர்கள் என்று யாரும் கேட்பது இல்லை. 

ஆனால் திருமணமான நடிகைகள் மீண்டும் நடித்தால் மட்டும் திருமணம் முடிந்துவிட்டதே இன்னும் நடித்துக்கொண்டே இருக்கிறீர்களே? என்று கேள்வி கேட்கிறார்கள்.

திருமணமானால் நடிப்பது தவறா? இந்த ஆண்டு நான் நடித்த 4 படங்கள் திரைக்கு வர உள்ளன. அதை சொல்லியாவது கேலி பேசுவார்கள் வாயை மூட வேண்டும் என்று கோபமாக பேசியுள்ளார். 



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...