திருமணம் ஆகி 2 வருடங்களில்... பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை! பகீர் தகவல்!

3 years ago 434

மறைந்த நடிகர் ராஜன் பி. தேவ்வின் மகன் உன்னி தேவ், மயலாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். 

அவரது மனைவி பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் மேலும், பல பகீர் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

பிரியங்கா - தேவ் தம்பதிகளுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்கு பின்னர் கொச்சிக்கு அருகிலுள்ள அங்கமாலியில் வசித்து வந்தனர். 

உன்னி தேவ், திருமணத்தின் போது அவரது பெற்றோர் வீட்டில் போட்ட அனைத்து நகைகளையும் சிறிது சிறியதாக வாங்கி விற்று விட்டதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு பிரியங்காவின் பெற்றோரையும் தொந்தரவு செய்து வந்ததாகவும், அதே நேரத்தில் பிரியங்காவை அடித்து கொடுமை படுத்தியுள்ளார். 

இதனால் கணவரை விட்டு பிரிய முடிவு செய்த பிரியங்கா, உன்னி தேவ் அடித்து கொடுமை படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகார் மீதான விசாரணை செய்வதற்கு முன்னரே பிரியங்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு தன்னுடைய உயிரை மாய்த்து கொண்டார்.

இந்த வழக்கு இப்போது அங்கமாலி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிரியங்கா உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்கொலை செய்து கொண்ட பிரியங்காவின் உடலில் பல்வேறு காயங்கள் இருப்பதாக உறவினர்கள் கூறியுள்ளததால், நடிகர் உன்னி தேவ் கைது செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பிரபல நடிகரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...