திருமணம் நடக்குமா? ஜோதிடரிடம் நேரம் கேட்ட நயன்தாரா! கொண்டாட்டத்தில் காதலர்!

3 years ago 259

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன்தாரா. ஆரம்பகாலத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து குறுகிய காலத்தில் இந்த இடத்தினை பெற்றார். 

புகழ் எவ்வளவுதான் வந்தாலும் சில காதல் கிசுகிசுக்களும் சிக்கி வந்தார் நயன். தற்போது விக்னேஷ் சிவனை 5 வருடங்களுக்கும் மேல் காதலித்து லிவ்விங் டு கெதரில் இருந்து வருகிறார்.

இவர்களின் திருமணம் எப்போது என்று பலர் கேட்டு வந்த சூழலில் தற்போது நயன் தாரா திருமணம் பற்றி ஜோதிரர் ஒருவருடன் தேதியை கேட்டுள்ளார்.

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து நயன்தாரா கடவுள் மற்றும் ஜோசியத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்ததாக தகவல்கள் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஜோசியர் என்ன சொன்னாலும் அதை தவறாமல் செய்து வருகிறாராம்.

அப்படி ஒரு ஜோசியர் விக்னேஷ் சிவனை விட உன்னை புரிந்து கொள்ளும் வேறு ஆண்மகன் கிடைக்கப்போவதில்லை என அந்த ஜோசியர் சொன்ன பிறகுதான் விக்னேஷ் சிவனை கணவராக மாற்றிக் கொள்ளலாம் என முடிவு செய்தாராம் நயன்தாரா.

நயன்தாராவின் வாழ்க்கையில் காதல் சர்ச்சைகளுக்கு ஒன்றும் பஞ்சமில்லை. ஒருவேளை ஜோசியக்காரர் மாற்றி கூறியிருந்தால் விக்னேஷ் சிவனை கழட்டி விட்டு போகவும் கொஞ்சம் கூட யோசித்திருக்கமாட்டார் நயன்தாரா.

இருவருக்கும் திருமணம் நடக்குமா என பல வருடமாக கனவு கண்டுகொண்டிருந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது அந்த கனவு பலிக்கும் நேரம் வந்துவிட்டதாம். சமீபத்தில் நயன்தாரா ஒரு ஜோசியரிடம் தன்னுடைய கல்யாணத்துக்கான தேதியை கேட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவரும் மார்ச் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட தேதியை குறித்து கொடுத்து விட்டாராம். இந்த செய்தி விக்னேஷ் சிவனுக்கு செல்ல, தலைவனுக்கு ஏகபோக சந்தோசம். இந்த முறையாவது சொன்னபடி திருமணம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...