ஒருகாலத்தில் சன் தொலைக்காட்சியில்
மகா, மெகா ஹிட் அடித்த தொடர்களில் தெய்வமகளும் ஒன்று. இந்த சீரியலில் அண்ணியார் பாத்திரம் செம ஹிட்.
அதேபோல் அந்தத் தொடரில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணா, ஹீரோயினாக நடித்த வாணிபோஜன் ஆகியோரும் ரொம்ப பேமஸ் ஆனார்கள்.
தெய்வமகள் சீரியலில் பட்டையைக் கிளப்பிய கிருஷ்ணாவின் ரியல் லைப் மனைவி யார் தெரியுமா? நடிகை சாயசிங் தான்.
அட ஆமாங்க. மன்மத ராசா பாடலுக்கு நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து பட்டையைக் கிளப்பிய நம்ம சாயாசிங்கே தான்.
ராஜ்புத் குடும்பத்தைச் சேர்ந்த சாயாசிங் பெங்களூரில் வளர்ந்தவர். நடிகை சாயாசிங்கும், கிருஷ்ணாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
கிருஷ்ணாவின் மனைவி தான் சாயாசிங் என்பதை தெரிந்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.