தொகுப்பாளினி டிடியின் முன்னாள் கணவரின் இரண்டாவது மனைவி இவரா?

3 years ago 523

விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தன்னுடைய நீண்ட நாள் நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

இவர்களுக்கு விவாகரத்து ஆகி 5 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், டிடியின் முன்னாள் கணவர், பெண் ஒருவருடன் நெருக்கமாக எடுத்த கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

15 வருடங்களுக்கு மேல் தொகுப்பாளினியாக இருக்கும், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் போதே தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து, கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான ஒரு வருடத்திற்குள்ளேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். 

விவாகரத்து பின்னர், திரைப்படங்களில் நடிப்பதிலும்... மாடலிங் போட்டோ கிராபி, ஆல்பம் பாடங்களில் நடிப்பது போன்றவற்றில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். 

விவாகரத்து குறித்து யாரேனும் கேள்வி எழுப்பினால், முடிந்ததை பற்றி நினைத்து டைம் வேஸ்ட் பண்ண கூடாது, வாழ்க்கையில் கடந்து செல்ல வேண்டியது நிறைய உள்ளது, எனவே அடுத்தடுத்த அடியை எடுத்து வைத்து செல்ல வேண்டும் என்பது போல், மிகவும் பாசிட்டிவாக பதில் கொடுத்து வந்தார்.

திவ்ய தர்ஷினி - ஸ்ரீகாந்த் தம்பதிகளுக்கு விவாகரத்து ஆகி 5 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது டிடியின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் வேறு பெண் ஒருவருடன் மிகவும் நெருக்கமாக உள்ளது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

எனவே, ஸ்ரீகாந்த் இரண்டாம் திருமணம் செய்துகொண்டாரா? இவர் தான் அவரது இரண்டாவது மனைவியா என்கிற சந்தேகத்தை பலர் எழுப்பி வருகிறார்கள். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...