த்ரிஷாவுக்கு முத்தம்
தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா என்பதும் சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.
’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கேரக்டருக்கு அவரை விட்டால் வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்ற அளவுக்கு அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது என்று விமர்சகர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு சின்ன குழந்தை தனது போஸ்டருக்கு உதட்டு முத்தம் கொடுக்கும் காட்சியின் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவுக்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ள நிலையில் ஏராளமான கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.