நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி யார் தெரியுமா?

3 years ago 488

நடிகர் கவுண்டமணியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் கன்னம்மபாளையம் அருகே உள்ள பல்லகொண்டாபுரம். இவரின் சொந்த பெயர் சுப்பிரமணி. 

இவருக்கு சிறுவயதில் இருந்த நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை. இதனால் பள்ளிக்கு செல்லாமல் நாடக கொட்டகையிலேயே காலத்தை கழித்தார்.

ஒரு முறை அவரது ஊரில் நாடகம் போட்டார்கள். அதில் இவர் கவுண்டர் வேடம் ஏற்று நடித்தார். இவரின் நடிப்பை பார்த்தவர்கள் அசந்துபோய் சுப்பிரமணியை அன்று முதல் கவுண்டமணி என்றே அழைத்தார்.

இவருக்கு 15 வயதாக இருக்கும் போது சகோதரி மைலாம்பாள் சென்னை அழைத்து வந்து பாய்ஸ் நாடக கம்பெனியில் சேர்த்து விட்டார்.


ஆரம்பத்தில் சர்வர் சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி, அன்னக்கிளி போன்ற படங்களில் கூட்டத்தில் ஒருவராக நடித்திருப்பார். பின்னர் 16 வயதினிலே படத்தில் காமெடியனாக அறிமுகம் செய்யப்பட்டார்.

அதன்பிறகு அவர் காமெடியில் பெரிய அளவில் வலம் வந்தார். சுமார் 700 படங்களுக்கு மேல் நடித்து இருக்கும் இவர் செந்திலுடன் சேர்ந்து 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் வசனத்தில் அனைவரையும் வெளுத்து வாங்கும் கவுண்டமணி சிறுவயதில் யாரிடமும் அதிகம் பேசமாட்டாராம். 

இவரது மனைவி சாந்தி. இவரை கவுண்டமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். செல்வி சுமித்ரா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...