நடனத்தில் மிரட்டும் சிவகாரத்திகேயன்! பிரின்ஸ் படத்தின் ”பிம்பிலிக்கி பிலாப்பி” பாடல்!

2 years ago 229

‘டான்’ பட வெற்றியைத் தொடர்ந்து ‘பிட்டாகோடா’, ‘ஜதிரத்னலு’ ஆகியப் படங்களை இயக்கிய அனூதீப்புடன் இணைந்து, தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் “பிரின்ஸ்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 

சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசை அமைத்திருக்கிறார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார்.

காரைக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தநிலையில், விநாயகர் சதுர்த்தி அன்று ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவித்த நிலையில், பின்னர் தேதியை மாற்றி தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

ஏறக்குறைய படப்பிடிப்புகள் நிறைவடைந்து இன்னும் ஒருசில காட்சிகள் மட்டுமே மீதம் உள்ள நிலையில், படத்தின் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. தொடர்ந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது. பிம்பிலிக்கி பிலாப்பி என்ற இந்தப்பாடலை அனிருத் பாடியுள்ளார். பாடல் காட்சிகளுடன் சேர்ந்து லிரிக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்த பாடல் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பாடலில் சிவகார்த்திகேயன் நடனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார்.

சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் பாடலும் நடனமும் சிறப்பாக வந்துள்ளது. தொடர்ந்து இந்தப் பாடலின் நடன காட்சிகளை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இன்னும் படம் வெளியாக இருமாதங்களுக்கும் குறைவாக இருப்பதால் தற்போதே படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட துவங்கியுள்ளனர்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...