நடிகரை திருமணம் செய்ய வேண்டும்…சிறை வாசலில் ரசிகை அலப்பறை!

4 months ago 127

பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தன் தோழிக்கு ரசிகர் ஒருவர் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறி மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார். 

முன்னதாக பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த தர்ஷன் தற்போது பல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் அவரை காண நாள்தோறும் ஏராளமான ரசிகர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் உறவினர்கள் மட்டுமே கைதிகளை பார்க்க அனுமதி உண்டு என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். 

இந்நிலையில் பல்லாரி சிறை வளாகத்திற்கு வந்த பெண் ஒருவர் தர்ஷனுக்காக பழங்கள் கொண்டு வந்துள்ளேன். இதை அவரிடம் கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறேன் என கூறியுள்ளார். 

மேலும் தன்னை உள்ளே அனுமதித்தால் தர்ஷனை திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருப்பதாக கூறி அந்த பெண் அலப்பறை செய்துள்ளார். 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...