நடிகர் அர்ஜூனின் இரண்டாவது மகளா இது? நடிகைகளை மிஞ்சிய அழகு... கிரங்கி போன ரசிகர்கள்..!

3 years ago 416

தமிழ்த்திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் வெகுசில நடிகர்களில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனும் ஒருவர். வயதானாலும் ஆக்‌ஷன்காட்சிகளில் இன்றும் நடிகர் அர்ஜூனே கோலோச்சுகிறார். 

இப்போது விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் ஷோவப் போல சர்வைவர் என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

அர்ஜூனின் தந்தை கே.ஜி.ராமசாமி என்ற சக்திபிரசாத் கன்னடத் திரையுலகில் பிரசித்திபெற்ற நடிகர் ஆவார். ஆக்சன் கிங் அர்ஜூனைப் பொறுத்தவரை நடிகர் மட்டுமல்ல, சிறந்த இயக்குனரும்கூட. 


அதிலும் அவரது படங்களில் தாய்நாட்டுப்பற்று கொஞ்சம் தூக்கலாக இருக்கும். கராத்தேயிலும் பிளாக் பெல்ட் பெற்றிருக்கும் ஆக்சன் கிங் 90 களில் பிஸியான நடிகராக வலம்வந்தார்.

ஆக்‌ஷன்கிங் அர்ஜூன் இப்போது சென்னையில் ஒருநாள் 2 படத்தை இயக்கிய ஜான்பால்ராஜின் இயக்கத்தில் ப்ரண்ட்ஷிப் என்னும் படத்தில் நடித்துமுடித்து சமீபத்தில் ரிலீஸானது. இதில் பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கியப்பாத்திரத்தில் நடித்தனர்.

ஆக்சன் சிங்.அர்ஜூனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். இதில் மூத்தவர் ஐஸ்வர்யா தமிழ்ப்படங்கள் சிலவற்றில் நாயகியாக நடித்துள்ளார். அவரது இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜூன் இதுவரை மீடியா பக்கமே சிக்காமல் எஸ்கேப் ஆகிவந்தார்.

இந்நிலையில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் இளைய மகள் அஞ்சனாவின் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகின்றது. அதைப் பார்த்த அர்ஜூன் ரசிகர்கள் சீக்கிரமே ஆக்சன் கிங் வீட்டில் இருந்து அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 
NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...