நடிகர் மணிவண்ணனுக்கு இவ்வளவு பெரிய மகளா..?

3 years ago 283

நடிகர் மணிவண்ணன் 1983ஆம் ஆண்டு ஜோதி என்ற ஒரு படத்தின் மூலம் இயக்குராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ‘நூறாவது நாள்’ என்கிற ஒரு படத்தினை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பினார்.

இயக்கம் மட்டுமில்லாது நடிப்பிலும் அசாத்திய திறமை பெற்றவர் மணிவண்ணன். 1989ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த கொடி பறக்குது என்ற ஒரு படத்தில் வில்லனாக நடித்து அனைவரையும் அசத்தி இருப்பார் மணிவண்ணன்.

1994ஆம் ஆண்டு வெளிவந்த அமைதிப்படை என்ற ஒரு அரசியல் படத்தின் மூலம் தனது அரசியல் ஞானத்தையும் காட்டினார்.

மணிவண்ணனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த நடித்த கோரிப்பாளையம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார். அமெரிக்காவில் வசிக்கும் மகள் ஜோதி, தந்தையின் நினைவுகளைப் பகிர்கிறார்.

“அப்பா இயக்கின ரெண்டாவது படம், `ஜோதி’. அந்தப் படம் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால், எனக்கும் ஜோதின்னு பெயர் வெச்சுட்டாரு. இயக்குநரா, நடிகரா 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிஸியா இருந்தார். அவர் வீட்டுல இருக்கும் நேரம் குறைவு.

`எங்களோடு அதிக நேரத்தைச் செலவழிங்கப்பா’னு நானும் தம்பி ரகுவண்ணனும் அடிக்கடி கேட்போம். `நான் நிறைய உழைச்சாதானே நீங்க கேட்கிறதை வாங்கித் தர முடியும்’னு சொல்வார். வேலை முடிஞ்சு மிட் நைட்ல வீட்டுக்கு டயர்டா வருவார்.

அப்பவும்,`சாப்பிட்டீங்களா கண்ணுங்களா, இன்னைக்கு உங்களோடு சேர்ந்து அப்பாவால் சாப்பிட முடியலை’னு கொஞ்சுவார். 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...