நடிகர் மோகனா இது? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க..!

3 years ago 375

தமிழ் திரையுலகில் ஒருகாலத்தில் ரஜினி, கமலுக்கே டப் பைட் கொடுத்தவர் மோகன். வெறுமனே மைக்கை கையில் வைத்துக்கொண்டு இவர் வாயை அசைப்பதற்கே சொக்கிப் போய் கிடந்தனர் தமிழ் ரசிகர்கள். அந்த அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய மாஸ் இருந்தது.

1980 காலங்களின் வசூல் சக்கரவர்த்தியாகவும் இருந்தார் மோகன். மோகன் படம் என்றாலே சுயராக 100 நாள்கள் ஓடிவிடும் காலமெல்லாம் இருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் நடிக்க வந்தார் மோகன். 

ஆனால் அந்த படம் ஊத்திக் கொண்டது. பயணங்கள் முடிவதில்லை, நெஞ்சத்தை கிள்ளாதே, மெளனராகம் என இவர் படங்கள் எல்லாம் செம ஹிட் அடித்தது. 


நீண்டகாலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மோகன், அண்மையில் ஒரு சினிமா பங்சனில் கலந்திருக்கிறார். அப்போது பிரபல நகைச்சுவை நடிகர் சாம்ஸ் என்பவர் மோகனை சந்தித்து புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அந்த புகைப்படத்தில் நீண்ட தாடி, முறுக்கு மீசை என ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போயிருக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே மோகனா இது? என ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர்.







NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...