நடிகர் யோகிபாபுவின் மகனைப் பாருங்க... முதன் முதலாக மகனை உலகுக்கு காட்டிய யோகிபாபு..!

3 years ago 478

செந்தில்_கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், புரோட்டா சூரி என தமிழ்த்திரையுலகில் காமெடியில் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவர் கோலோச்சுவர். அந்த வகையில் இது யோகி பாபுவின் காலம்!

யாமிருக்க பயமேன் படத்தில் பன்னி மூஞ்சி வாயன் என்னும் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதன் பின்னர் வெளியாகும் படங்களில் எல்லாம் திரையரங்கில் அவர் முகம் தெரிந்தாலே, ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு போய்விடுகின்றனர்.


இதனாலேயே இவருக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. அண்மையில் அஜித் நடிப்பில் சக்கைப்போடு போட்ட விஸ்வாசத்திலும் யோகி பாபு நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் மட்டும் அவரது நடிப்பில் 20 படங்கள் வந்தன. 

ஒருபக்கம் பக்காவான நகைச்சுவை ரோலில் நடிக்கும் யோகிபாபு, மற்றொருபுறம் பரியேறும் பெருமாள் போன்ற கலை, சமூக அக்கறை தாங்கிய படத்திலும் நாயகனுடன் படம் முழுவதும் ஜார்னி செய்திருப்பார்.

இதேபோல் தர்மபிரபு உள்பட வரிசையாக பல படங்களிலும் ஹீரோவாக நடித்துவருகிறார். அண்மையில் மிக சிம்பிளாக தன் திருமணத்தை முடித்தார் யோகிபாபு. சமீபத்தில் இவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.

இந்நிலையில் லாக்டவுண் முடிந்து அண்மையில் கோயில்கள் திறக்கப்பட்டன. கிதனைத் தொடர்ந்து தனது மனைவி, மகனோடு யோகிபாபு கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் யோகிபாபு, முதன் முதலாக தன் குழந்தையைக் காட்டியுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...