நடிகர் விஜய் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் உள்ள பனையூரில் தனது ரசிகர் மன்றத்தினரைச் சந்தித்து பேசினார்.
அங்கு வருகை தந்திருந்த தனது ரசிகர்களை பார்த்து, விஜய் நெகிழ்ச்சியுடன் ரஞ்சிதமே பாடலில் வருவது போல அவருடைய ரசிகர்களுக்கு செய்கையால் முத்தம் கொடுத்தார்.
இந்நிலையில், அங்கு வருகை தந்திருந்த நடிகர் விஜயின் கார் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது குறித்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன் கேள்விப்பி விவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உடனடியாக, விஜய் பெயரில் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த செய்தியை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.