நடிகை அஞ்சலிக்கு திருமணமா? வைரலாக கசியும் தகவல்கள்!

3 years ago 233

தமிழ் - தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை அஞ்சலிக்கு திருமணம் என்ற தகவல் இணையத்தில் கசிந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘கற்றது தமிழ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. முதல் படத்திலேயே அனைவர் மனதையும் கவர்ந்த அவர் அதன்பின் ’அங்காடித்தெரு’ படத்தில் அவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. 

இதனை அடுத்து தூங்காநகரம், மங்காத்தா, வத்திக்குச்சி, இறைவி, பேரன்பு, நாடோடிகள் 2, உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.


இந்த நிலையில் 34 வயதான அஞ்சலிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் தான் மாப்பிள்ளை என்றும் இது பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

திருமணம் குறித்து அஞ்சலி தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் இந்த தகவல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...