நடிகை ஊர்வசியின் மகளா இது? இவ்வளவு பெருசா வளர்ந்துட்டாரே.. நீங்களே பாருங்க

3 years ago 488

தமிழ், மலையாளம் என இருமொழிகளிலும் நடித்துக் கலக்குபவர் நடிகை ஊர்வசி. மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலுக்கு ஜோடியாக இவரது நடிப்பு அசாத்தியமாக இருக்கும். 

அதனால் தான் இயக்குனர்கள் ஊர்வசியை நடிப்பு ராட்சசி என பாராட்டுகின்றனர். ஊர்வசியின் முதல் படமான ‘முந்தானை முடிச்சு’ படமே ரசிகர்கள் மனதில் அவரை நச்சென இருக்கை போட்டு அமரவைத்தது.

சிட்டி டைப் இல்லாத, ஒருவகையான கிராமத்து, அப்பாவி ரோல் என்றால் அசத்தி எடுத்துவிடுவார் ஊர்வசி. ஹீரோயினாக இருந்து மார்க்கெட் போனதும் அம்மா பாத்திரம், குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துவருகிறார். 

சிவா மனசுல் சக்தி படத்தில் ஜீவாவுக்கு அம்மா, சிவகார்த்திகேயனுக்கு அம்மா பாத்திரம், மூக்குத்தி அம்மனில் ஆர்.ஜே.பாலாஜிக்கு அம்மா பாத்திரம் என கலக்கினார்.

கடந்த 2000வது ஆண்டில் மனோஜ் கே ஜெயன் என்ற வில்லன் நடிகரை காதலித்துக் கைப்பிடித்தார் ஊர்வசி. கருத்து வேறுபாட்டால் கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தத் தம்பதியினர் பிரிந்தனர். 

தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை ஊர்வசி இரண்டாவது திருமணம் செய்தார். அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டும் ஒருமுறை தாய் ஆனார். ஊர்வசியில் மூத்த மகளோ இப்போது நெடு, நெடுவென வளர்ந்து அவரே ஹீரோயின் போல் ஆகிவிட்டார்.

 இதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே ஊர்வசிக்கு இவ்வளவு பெரிய மகளா? மிகவும் அழகாக இருக்கிறாரே எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...