நடிகை குஷ்பு வெளியிட்ட புதிய புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

3 years ago 588

படங்கள் சீரியல்கள் என நடித்து புகழ்பெற்ற குஷ்பு தற்போதும் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருவதுடன், அரசியலிலும் களமிறங்கியுள்ளார்.

இதனிடையே, குஷ்பு சில வாரங்களுக்கு முன்பு தனது அற்புதமான உடல் மாற்றத்தின் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.

ஆரோக்கியமான உணவு மற்றும் ஒர்க் அவுட் மூலம் தனது உடல் எடை இழப்பு பயணத்தை இவர் மிகவும் பொறுப்புடன் மேற்கொண்டார். 


அதன்மூலம் தனது உடல் எடையில் 14 கிலோவைக் குறைத்து தற்போதைய இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவுக்கு செம அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்கிறார்.

தற்போது இவர் கலர் தமிழ் தொலைக்காட்சியில் இந்த மாதம் ஒளிபரப்பாக உள்ள டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2-வில் ஜட்ஜாக பங்கேற்கிறார். அவருடன் தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் பிருந்தா கோபாலும் நடுவராக இருக்க போகிறார்.

குறித்த ரியாலிட்டி ஷோவை காண மிக ஆவலுடன் இருக்கும் நடிகை, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியின் தொகுப்புகளில் இருந்து எடுத்துக்கொண்ட சில போட்டோக்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.


அந்தவகையில் தற்போது சிகப்பு நிற புடவையில் நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள புகைப்படங்கள், ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது.

அவரின் இன்ஸ்டா பதிவுக்கு கமெண்ட் செய்திருந்த ரசிகர்களில் ஒருவர், இளமை திரும்புதே என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பலர் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...