நடிகை சன்னி லியோன் தான் வேண்டும்! அடம்பிடித்த 60 வயதான நடிகர் கார்த்திக்!

3 years ago 396

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்தும் ஜாக்லேட் பாயாகவும் திகழ்ந்தவர் நடிகர் கார்த்தி. முன்னணி இயக்குநர்கள் படத்தில் தனக்கென பேச்சு ஸ்டைலில் அனைவரையும் கவர்ந்து வந்தார்.

தற்போது அவருக்கு அடுத்ததாக தன் இடத்தினை பிடிக்க அவரது மகன் கெளதம் கார்த்திக்கை அறிமுகம் செய்து வளர்ந்து வரும் நடிகராக திகழ வைத்துள்ளார்.

அவ்வப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த கார்த்திக் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். கார்த்தி நடிக்கும் படத்திற்கு தீ இவன் என பெயர் வைத்துள்ளனர். 

அதிரடி படமாக உருவாகும் இந்த படத்தை விஜய் சேதுபதியின் சிந்துபாத் படத்தை தயாரித்த ஜெயமுருகன் என்பவர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் பாடல்களையும் அவரே எழுதியுள்ளாராம்.

கார்த்திக்கு ஜோடியாக பல வருடங்கள் கழித்து சுகன்யா நடித்து வருகிறார். சமீபத்தில் பொள்ளாச்சியில் 45 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்ட படக்குழு விரைவில் மும்பை செல்ல உள்ளதாம். இந்நிலையில் சன்னி லியோன் இந்த படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடினால் படத்தின் மார்க்கெட் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என கார்த்திக் சிபாரிசு செய்ததாக தெரிகிறது. ஏற்கனவே சன்னி லியோன் ஜெய் நடித்த வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...