நடிகை தேவயானியின் மகளை பார்த்து இருக்கீங்களா? இவ்ளோ பெருசா வளர்ந்துட்டாங்களா?

3 years ago 705

1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தேவயானி.

தொடர்ந்து, விஜய், அஜித்,விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.

புகழின் உச்சத்தில் இருந்த போது இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் இருக்கின்றனர்.

தேவயானி தற்போது சினிமாக்களில் சிறு முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் தேவயானி அவரது கணவர் ராஜ்குமார் மற்றும் மகள் இனியா ஆகியோர் விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது, எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனைக் கண்ட ரசிகர்கள் தேவயானியின் மகளா இது? அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிறாரே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...