நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிகக் குறைந்த அளவிலான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை கவர்ந்தவர் ஆதி. மிருகம், ஈரம், மரகத நாணயம் என்று வெவ்வேறு வேடங்களில் அசத்தினார்.
அதே போல நிக்கி கல்ராணியும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2 உள்ளிட்ட பல ஜாலியான படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையே படங்களில் ஒன்றாக நடித்த ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி காதலில் விழுந்து கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தமும் செய்துக் கொண்டது. இதையடுத்து அவர்களின் திருமணம் கடந்த மே மாதம் நடந்தது.
இந்நிலையில் தற்போது நிக்கி கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.