தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. நடனத்திலும் சிறந்து காணப்பட்ட நடிகை பானுப்ரியா இப்போதெல்லாம் அவ்வளவாக படங்கள் நடிப்பதில்லை.
1998ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு அபிநயா என்ற மகளும் உள்ளார்.
சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பானுப்ரியா, எனது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த பின்னர் எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்துவிட்டது.
எதையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை, மனமும் வெறுமையாகிவிட்டது. படப்பிடிப்புகளில் வசனங்கள் மறந்துபோன சம்பவங்களும் நடந்துள்ளன என கண்ணீர்விட்டு பேசியுள்ளார்.
அதேபோல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக வந்த தகவல்களும் உண்மையில்லை, எனது கணவர் இல்லாததால் அதைப்பற்றி இப்போது பேச விரும்பவில்லை என கூறியுள்ளார்.
Is Banupriya Suffering From This Disease