நடிகை மதுபாலாவுக்கு இவ்வளவு அழகான மகள்களா?

3 years ago 344

மலையாள திரைப்படங்களின் மூலம் இண்டஸ்ட்ரீக்கு வந்த மதுபாலாவுக்கு தமிழில் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படம் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்தது. அறிமுகப்படமே சூப்பர், டூப்பர் ஹிட் அடித்தது.

1972 இல் சென்னையில் பிறந்த மதுபாலா கே.பாலசந்தர் இயக்கிய அழகன் திரைப்படம் மூலம் இண்டஸ்ட்ரீக்கு அறிமுகமானார். 1992 இல் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

சினிமாவில் பிஸியாக இருந்தபோதே கல்யாணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார் மதுபாலா. 1999 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடந்தது. நடிகை ஹமா மாலினியின் உறவினர் ஆனந்த ஷாவை திருமணம் செய்துள்ளார் மதுபாலா.

இப்போது மதுபாலாவுக்கு தோலுக்கு மேல் வளர்ந்த இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். நடிப்புக்கு முழுக்குப் போட்டு குடும்பத்தையே கவனித்துவரும் மதுபாலாவின் மூத்த மகளின் பெயர் அமெயா. 

இளைய மகளின் பெயர் கெயா . இவர்களின் மகள்களின் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...