நடிகை லட்சுமியை நியாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

3 years ago 343

தமிழ்த்திரையுலகில் ஒருகாலத்தில் முண்ணனி நடிகையாக வலம் வந்த லட்சுமி இப்போது 67 வயதில் வயோதிக நிலையில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. 

‘இயக்குனர் மல்லியம் ராஜகோபாலால் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்யப்பவர் நடிகை லட்சுமி.யரகுடிபாடி வரதராவ், ருக்மணி தம்பதியினரின் மகளான லட்சுமி, 1968ல் வெளியான ஜீவனாம்சம் திரைப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

இவரது பெற்றோரும் சினிமாத்துறை பிண்ணனி கொண்டவர்கள்தான். ருக்மணி தமிழ்ப்படங்களில் நடிக்கவும், வரதராவ் சமூக அக்கறைக்கொண்ட படங்களை தயாரிக்கவும் செய்திருந்தார். 


1977ல் சிலநேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்ததற்காக லெட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தொடர்ந்து முதன்மைப்பாத்திர வாய்ப்பு இழந்து துணைப்பாத்திரங்களில் நடிக்கத் துவங்கினார். 

இதுவரை 400 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் லெட்சுமி, ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக நடித்தார். அது செம ஹிட்டானது.

சின்னத்திரையில் தமிழில் அச்சமில்லை அச்சமில்லை என்னும் அரட்டைத் தொடரையும் நடத்தினார். அதேபோல் கன்னடத்தில் அது கதே அல ஜீவனா என்னும் அரட்டைத் தொடரை நடத்திவருகிறார். 

லெட்சுமிக்கு இப்போது 67 வயது ஆ கிறது. அவரது முடியெல்லாம் நரைத்து வயோதிகத் தோற்றத்தில் இருக்கும் அவரது புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...