நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா?... ஷாக் ஆன ரசிகர்கள்.....

3 years ago 411

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள படங்களில் முக்தா என்ற பெயரிலும், தமிழில் பானு என்ற பெயரிலும் அவர் நடித்துள்ளார்.

தமிழில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமானார் நடிகை பானு. கடைசியாக தமிழில்  ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து 2015-ம் ஆண்டு நடிகை பானுவுக்கும் தொழிலதிபரான ரிங்கு டோமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 


இந்த தம்பதிகளுக்கு தற்போது கியாரா என்கிற 5 வயது மகளும் உள்ளார். அவ்வப்போது, தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும்  புகைப்படங்கள் சிலவற்றை பானு சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போது கியாராவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார்.

இந்த தகவலை பானு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பானு தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வேலம்மாள் என்ற சீர்யலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடதக்கது.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...