நடிகையாக களமிறங்கும் சாய் பல்லவியின் தங்கை

3 years ago 205

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. 

இதையடுத்து தமிழில், தியா, மாரி 2, என்.ஜி.கே. போன்ற படங்களில் நடித்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

ராணாவுடன் விராட பருவம், நாக சைத்தன்யாவுடன் லவ் ஸ்டோரி, பவன் கல்யாணுடன் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜாவும் நடிகையாக அறிமுகமாக உள்ளாராம். இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் பூஜா நடிக்கிறாராம்.

இதில் நடிகர் சமுத்திரகனியின் மகளாக அவர் நடிக்கிறார். பொள்ளாச்சி சம்பவம் சாயலில் இப்படம் தயாராவதாக கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு கோவையில் நடந்து வருகிறது. சாய் பல்லவியின் தங்கை பூஜா, ஏ.எல்.விஜய்யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...