நடிப்புக்கு பிரேக் கொடுக்கும் காஜல் அகர்வால்.. வெளியான அதிர்ச்சித் தகவல்

3 years ago 326

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, ரஜினி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் அடுத்ததாக கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் நாகார்ஜுனாவுடன் ஒரு படத்திலும் நடிக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் கௌதம் கிச்சலு என்ற தொழிலதிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்குப் பின்னரும் கணவருடன் நேரத்தை செலவழிக்காமல் தொடர்ந்து படங்களில் நடிப்பது பெரிய படங்களுக்கு விளம்பரம் செய்வதும் என பிஸியாக இருந்து வருகிறார். இதனால் சொந்த வாழ்க்கையில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.

இதனால் தன்னுடைய கணவருடன் நேரத்தை செலவிட நடிப்புக்கு சில காலம் பிரேக் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார். காஜல் அகர்வாலின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...