நடுக்காட்டில் தொங்கும் நமீதா.. வைரலாகும் போட்டோ.. பதறும் ஃபேன்ஸ்!

3 years ago 494

நடிகை நமீதா தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். விஜய், விஜயகாந்த், சரத்குமார், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக அவரது நடிப்பில் பொட்டு மற்றும் மியா படங்கள் வெளியானது. இதில் பொட்டு படத்தில் பெண் மந்திரவாதியாக மிரட்டினார். தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா.

இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் உருவாகிறது. இந்தப் படத்தை நமீதாவை தயாரிக்கிறார். ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தின் காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் காட்சி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நமீதா. அதில் நட்ட நடுக் காட்டில் வவ்வால் போன்று தொங்குகிறார். உடம்பில் பெல்ட்டுகள் கட்டப்பட்டு அந்தரத்தில் தொங்குகிறார் நமீதா.

நமீதாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், அடுத்த ரவுண்ட் அதிரடி தானா என கேட்டு வருகின்றனர். ஏற்கனவே இந்தப் படத்தின் காட்சி ஒன்றுக்காக கிணற்றில் விழுந்தார் நமீதா. 

அதனை உண்மை என்று நினைத்த ஷூட்டிங் பார்க்க வந்த மக்கள் அவரை காப்பாற்ற முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...