நமீதாவுக்கு முத்தம் கொடுத்த ரோபோ சங்கர்... மனுசனுக்கு மச்சம்யா?

3 years ago 367

தமிழ் சினிமாவில் சரத்குமாருடன் ‘அர்ஜுனா அர்ஜூனா அம்பு விடும் அர்ஜுனா’ பாடல் மூலம் ரசிகர்களை கிறங்கடித்தவர் நமீதா. விஜயகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

கவர்ச்சி பாமாக வலம் வந்த நமீதா உடல் எடை கூடியதால் சினிமா வாய்ப்புகளை இழந்தார். எனவே, சின்னத்திரை பக்கம் ஒதுங்கி மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவர்களில் ஒருவராக இருந்தார். 

திடீரென திருமணமும் செய்து கொண்டார். அதன்பின் அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு தேர்தல் பிரச்சாரமெல்லாம் செய்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சில வருடங்கள் அமைதியாக இருந்த அவர் திடீரென பாஜகவில் இணைந்தார். 


தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க முடிவெடுத்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள சீரியல் மூலம் நடிகை நமீதா ரீ-என்ட்ரீ கொடுக்கவுள்ளார். 

அதேபோல், கலர்ஸ் தொலைக்காட்சியில் ‘கன்னித்தீவு’ என்கிற தொடரிலும் அவர் நடிக்கவுள்ளார். இதில் அவருடன் ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

இந்நிலையில், நமீதாவின் கையில் ரோபோ சங்கர் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை புரமோஷனுக்காக கலர்ஸ் டிவி வெளியிட்டுள்ளது. 

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘மனுசனுக்கு மச்சம்யா’ என பதிவிட்டு வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...