நயன்தாராவா இது..? நம்பவே முடியலையே..! ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

3 years ago 449

தமிழ், தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த 2003 ம் ஆண்டு சத்தியன் அன்திகாத் இயக்கிய மனசினக்கரே என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை துவக்கினார்.

 

இந்த படத்தில் கெளரி என்ற கேரக்டரில் நடிகர் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்தார். இப்படத்தில் இவர்கள் இருவரிடையேயான ரொமான்ஸ் காட்சிகளும், பாடல்களும் மிகவும் பிரபலமானது. 

 

இந்நிலையில் நயன்தாராவின் முதல் பட போட்டோவை சமீபத்தில் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். 

நயன்தாராவா இது..? என அனைவரும் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியப்படும் வகையில் முற்றிலும் மாறுபட்டதாக உள்ள நயன்தாராவின் போட்டோ உள்ளது. இதனை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...