நயன்தாராவின் நெற்றிக்கண் பட மேக்கிங் வீடியோ வெளியானது!!

3 years ago 384

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான நெற்றிக்கண் இன்னும் சில தினங்களில் வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி டிஸ்னிப்லஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது.

பிளைன்ட் என்ற கொரியன் திரைப்படத்தை தழுவி உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கும் நெற்றிக்கண் படத்தில் மிரட்டலான வில்லனாக நடிகர் அஜ்மல் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் மணிகண்டன் மற்றும் சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் கிராஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் நெற்றிக்கண் திரைப்படத்தை அவள் திரைப்படத்தை இயக்கிய மில்லின்ட் ராவ் இயக்கியுள்ளார்

தமிழ் சினிமாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான R.Dராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்திற்கு அவள் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசை அமைக்கிறார். 

முன்னதாக நெற்றிக்கண் திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் தற்போது நெற்றிக்கண் படத்தின் மேக்கிங் வீடியோவை டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. 


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...