நயன்தாராவுக்கு ஒரு நியாயம்! எனக்கு ஒரு நியாயமா! திரிஷாவின் அதிரடியால் கடும்கோபத்தில் தயாரிப்பாளர்கள்

3 years ago 353

தென்னிந்திய சினிமாவில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக கனவுக்கன்னியாக இருந்து வருபவர் நடிகை திரிஷா. 

மிஸ் சென்னை பட்டம் வாங்கிய பின் அதே வருடம் ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடிக்க ஆரம்பித்தார்.

இதையடுத்து முன்னணி நடிகர்கள், விஜய், அஜித், கமல், ரஜினி, சூர்யா, விக்ரம் உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். சமீபகாலமாக பல சர்ச்சையில் சிக்கி படவாய்ப்பின்றி இருந்தார்.

96 படம் அவருக்கு ரீஎண்ட்ரி கொடுத்தது. தற்போது நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து வருகிறார். 

அந்தவகையில், பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன் தயாரியாளரும் இயக்குநருமான திரு இசை வெளியீட்டு விழா மற்றும் பிரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைத்துள்ளார். ஆனால் அதற்கு திரிஷா என்னால் வர முடியாது என்று கூறியுள்ளாராம்.

மேலும் நயன் தாரா கூடதான் எதில் கலந்து கொள்வதில்லை. அவருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா என்று பதிலளித்துள்ளார் இதனால் கடும்கோபத்தில் திரிஷா இப்படி செய்கிறார் என்று தயாரியாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளாராம்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...