நயன்தாராவை நிராகரித்த முன்னணி இயக்குநர்.. ஏன் தெரியுமா?

2 years ago 312

நடிகை நயன்தாரா தற்போது ஜவான், கனெக்ட், இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை நயன்தாரா,  ரஜினியுடன் சந்திரமுகி, அஜித்துடன் பில்லா என தொடர்ந்து நடித்து முன்னணி நடிகை அந்தஸ்தை பெற்றார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் நடிக்க வந்த போது அவரை இயக்குநர் பார்த்திபன் தன்னுடைய குடைக்குள் மழை படத்தின் கதாநாயகியாக முதன் முதலில் தெரிவு செய்துள்ளார்.


கதாநாயகியாக தேர்ந்தெடுத்த மறுநாள் தன்னை சந்திக்க வரும்படி பார்த்திபன் கூறியுள்ளார். 

ஆனால், சொன்ன நேரத்திற்கு நயன்தாராவால் பார்த்திபனை சந்திக்க முடியாமல் போக படத்தில் இருந்து நயன்தாராவை தூக்கிவிட்டாராம் பார்த்திபன்.

பின்னர் இந்த கதாபாத்திரத்தில் மதுமிதா  நடித்திருந்தார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...