நவரச நாயகன் கார்த்திக்கின் முதல் மற்றும் 2வது மனைவியை பார்த்து இருக்கீங்களா?

3 years ago 293

நவரச நாயகன் கார்த்திக்  “அலைகள் ஓய்வதில்லை” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

தற்போது கார்த்திக் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் முத்துராமனின் மகன் ஆவார். 

2006 ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்த இவர் தற்போது அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் துவங்கியுள்ளார்.

நடிகை ராகினி சோழ குயில் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் 1988ம் ஆண்டு நடிகர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். 


இந்த தம்பதிக்கு கௌதம், கைன் என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கெளதம் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இதன் பின்னர் நடிகர் கார்த்திக் மனைவி ராகினியின் சகோதரி ரதியை 1992ஆம் ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் – ரதி தம்பதிக்கு திரன் என்ற மகன் உள்ளார்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...