நாச்சியார் படத்தில் நடித்த பெண்ணா இது? மாடர்ன் உடையில் எப்படி இருக்காங்கன்னு பாருங்க

3 years ago 396

ஜி.வி.பிரகாஷ் தமிழில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இப்போது வலம் வருகிறார். கிரீடம், மதராசப் பட்டிணம் படங்களில் இவரது இசை தனிக் கவனம் பெற்றது. 

இசையமைப்பாளராக மட்டும் அல்லாமல் ஜி.வி.பிரகாஷ் சினிமாவில் ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். அதற்கு முதன் முதலில் அச்சாரம் போட்டது பென்சில் என்னும் படம் தான்.

இவர் இயக்குனர் பாலா இயக்கிய ‘நாச்சியார்’ என்னும் படத்திலும் நடித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் பெரும் வெற்றிபெற்றது. 


இந்தப்படத்தில் நடிப்பு ராட்சசி ஜோதிகாவும் நடித்திருந்தார். இந்தப்படத்தில் ஜீ.வி.பிரகாஷின் மனைவியாக இழுத்து மூடி நடித்திருந்தவர் இவானா. இவர் கிராமத்துப்பெண்ணாக நடித்திருந்தார்.

இவரது பூர்வீகம் கேரளம். அலீனா ஷாஜி என்பது தான் இவரது நிஜப்பெயர். இவானா உண்மையில் செம மாடர்ன்னான பெண். தொடர்ந்து சிவ கார்த்திகேயனின் ஹீரோ படத்தில் நடித்தார். 

அதில் இவர் ஏற்ற மதி கேரக்டர் வெகுவாகப் பேசப்பட்டது. நாச்சியாரில் பக்கா பட்டிக்காட்டுப் பெண்ணாக நடித்த இவர் உண்மையில் செம மாடர்னாக காட்சியளிக்கிறார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அடடே இந்தப் பெண்ணா இது? என ஆச்சர்யத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.



NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...