‘நானே வருவேன்’ படப்பிடிப்பின் தாமதத்துக்கு இதுதான் காரணம்...வெளியான புதிய தகவல்

3 years ago 201

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். 

இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது. தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. 

இந்நிலையில், நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படாததற்கான காரணம் வெளியாகி உள்ளது. 

அதன்படி பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததால் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு தேதியை செல்வராகவன் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

வருகிற நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...