நான் மிகவும் பலவீனமானவள்.... விவாகரத்துக்கு பின் மனம் திறந்த நடிகை சமந்தா!

3 years ago 307

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னனி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா தமிழில் மெர்சல், கத்தி, தெறி பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 

இவர் கடந்த ஆண்டு 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 

இதனை தொடர்ந்து நடிகை சமந்தா விவாகரம் குறித்து மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனக்கு தெரியும் நான் இனிமேல் தான் என் வாழ்க்கையை வாழப்போகிறேன். எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது என்னுடைய மனவலிமையை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். 

மனதளவில் நான் மிகவும் பலவீனமானவள். எங்கள் பிரிவுக்கு பிறகு நான் மனம் நொறுங்கி இறந்து விடுவேன் என நினைத்தேன். ஆனால் நான் இவ்வளவு வலிமையாக இருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...