நினைச்சாலே நடுங்குது! பல நாள் தூங்கவே இல்லை! காஜலின் பயத்திற்கு என்ன காரணம் தெரியுமா?

3 years ago 351

தமிழ் சினிமாவில் பழனி திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 

ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள நடிகை காஜலுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் காஜல் தற்போது வெங்கட்பிரபு எழுதி இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். 


பயங்கர திரில்லர் கதையம்சம் கொண்ட பேய் படமான இதில் கயல் ஆனந்தி, வைபவ், பிரியங்கா, டேனியல் ஆன்டி பாப், செல்வா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இதில் நடித்த அனுபவம் குறித்து காஜல் கூறுகையில், இந்த தொடரின் ஷூட்டிங் மலை உச்சியில் உள்ள ஒரு தனி வீட்டில் நடைபெற்றது. அந்த வீடு ரொம்ப பயங்கரமாக இருந்தது. 

அது பல சமயங்கள் என்னை பயமுறுத்துமாறு இருந்தது. ஷூட்டிங் முடிந்த பிறகும் பேய் பயத்தால் என்னால் பலநாட்கள் தூங்க முடியவில்லை. அந்த வீட்டை நினைத்தால் தற்போது கூட எனது குரல் நடுங்குகிறது எனக் கூறியுள்ளார்.




NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...