நிர்வாண புகைப்படம் கேட்ட ரசிகர்...நெத்தியடி கொடுத்த பிரியாமணி

3 years ago 516

தமிழில் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி பருத்தி வீரன் படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார். 

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் ‘கொட்டேஷன் கேங்க்’ படத்திலும் தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடிக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியாமணி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார். அதற்கு நிறைய வரவேற்பும், விமர்சனங்களும் கிளம்பின.

இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார். இதனால் கோபமான பிரியாமணி முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன் என்று சாடினார். 

பிரியாமணியின் பதில் வைரலாகி பரபரப்பானது. சரியான பதிலடி கொடுத்ததாக பிரியாமணியை வலைத்தளத்தில் பலர் பாராட்டியும் வருகிறார்கள்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...