நிறைவுக்கு வரும் சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர் ! ரசிகர்கள் சோகத்தில்

3 years ago 394

சன் டிவியில் ஒளிபரப்பான செம ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.சுந்தர் சியின் அவ்னி ப்ரோடுக்ஷன் நிறுவனம் இந்த தொடரை தயாரித்திருந்தனர். சுந்தர் சி இந்த தொடருக்கு கதை எழுதியிருந்தார்.

ராஜ்கபூர் இந்த தொடரை இயக்கி இருந்தார்.பிரம்மாண்டமாக தயாரான இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பானா நேரத்தில் TRP-யை அள்ளி வந்தது.

விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து தனது ஒளிபரப்பை நிறுத்தியது.இதன் இரண்டாம் பாகம் தற்போது ஜோதி என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது.இரண்டாவது சீசனில் விஷ்ணு உன்னிகிருஷ்ணன் ஹீரோவாக நடிக்கிறார்.மேகாஸ்ரீ மற்றும் சாந்தனா சேகு இருவரும் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.

இந்த தொடரையும் அவ்னி புரொடக்ஷன்ஸ் தயாரிக்கின்றனர்.ராஜ்கபூர் இயக்கவுள்ளார்.இந்த தொடரின் சில எபிசோடுகள் மட்டும் படமாக்கப்பட்டு பின்னர் சில காரணங்களால் கைவிடப்பட்டது.முதலில் சன் NXT மற்றும் தெலுங்கில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சன் டிவியில் கடந்த மே மாதம் முதல் வார இறுதியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் எடுக்கப்பட்டவரை ஒளிபரப்பு செய்யப்பட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. விறுவிறுப்பாக சென்று வந்த இந்த தொடர் நிறைவடைவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...