நீங்க தான் கேரளத்து ஐஸ்வர்யா ராய்.. புகழும் ரசிகர்கள்!

3 years ago 422

மலையாளத்தில் வெளியான நித்ரா என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மாளவிகா மேனன் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். 

விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து வந்த இவருக்கு அடுத்த படமே ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

விழா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா மேனன் அதைத் தொடர்ந்து வெத்து வேட்டு, பிரம்மன், நிஜமா நிழலா ஆகிய படங்களில் நடித்திருந்தார்.


தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளத்தில் அசுர வேகத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இப்பொழுது தெலுங்கில் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த மாளவிகா மேனன் அம்மாயிலு அந்தே அதே டைப் படத்தில் நடித்து டோலிவுட்டுக்கு அறிமுகமாக அதைத் தொடர்ந்து வந்தனம் என்ற மற்றொரு தெலுங்கு திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தமிழில் தற்போதைக்கு பேய் மாமா, அருவா சண்டை உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மாளவிகா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகியுள்ளது. 

அதில் கருப்பு பாவாடை தாவணியில் சிக்கென்று இருக்கும் இடையைக் காட்டி கொண்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகாவை ரசிகர்கள் கேரளத்து ஐஸ்வர்யா ராய் என புகழ்ந்துள்ளனர்.


NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...