நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கைதி 2 எப்போது வெளியாகிறது தெரியுமா..?

3 years ago 238

மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தொடர்ந்து கைதி திரைப்படத்தை எடுத்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக மாறிவிட்டார்.

கடந்த ஆண்டு  விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்துடன் இறங்கிய கைதி திரைப்படம் பிகில் திரைப்படத்தின் வசூல் அளவிற்கு செய்யாவிட்டாலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. 

இந்த நிலையிலிருந்து கைதி படத்திற்கான இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழுப்பியுள்ள வருகின்றது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜயை வைத்து மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக கைதி  படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  நடிகர் கார்த்தி தற்போது நடித்திருக்கும் சுல்தான் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளார்.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...