படக்குழுவினரை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சோனியா அகர்வால்

3 years ago 371

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற பெயரில் உருவாகியுள்ளது. இப்படத்தை ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.  பிரதானமான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.

மலையாளப் படங்களில் நாயகன் வேடங்களில் நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார். 

இப்படத்தை ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...