படப்பிடிப்பில் அதிர்ச்சி... மயங்கி விழுந்த பிரபல கலைஞர் மாரடைப்பால் மரணம்...!

3 years ago 288

தெலுங்கு திரையுலகில் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். 


அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி தாறுமாறு வைரலானது. 

முதலில் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்திலிருந்து விலகினார். 


மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மெகா பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இந்த படம் உருவாகி வருகிறது. 

ஆகஸ்ட் 13ம் திகதி அன்று படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

ராஜமுந்திரியில் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் புகைப்பட கலைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

NEWS21
சினிமா செய்தி இணையத்தளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
ஆஹா FM Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...